2015ல் அதிக சம்பளம் கிடைக்கும் 7 ஐ.டீ தொழில்கள்

06:06 0 Comments

2015ல் அதிக சம்பளம் தரக்கூடிய 7 ஐ.டி தொழில் துறைகள்.

இந்த வருடத்தில் (2015இல்) கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொழில்களுக்கு 19% வரையிலான அளவுக்கு தொழிற்சந்தையில் பாரிய கேள்வி ஏற்படுமென அமேரிக்க நிறுவனம் ஒன்று எதிர்வு கூறியுள்ளது,
ஐ.டீ துறையில் ஆர்வமுள்ள பலரும் இப்பொழுதெல்லாம் ஐ.டீ துறைக்கு மார்கெட் இல்லையென்று வழி மாறி தங்களுக்கு பிடித்தமான துறையை விட்டு இன்னுமொரு துறையை தேர்வு செய்கின்றனர்.
இவ்வாறான காரணங்களினால் சாதாரண தர மாணவர்கள்,உயர்தர மாணவர்கள் பெரும்பாலும் ஆர்வமிருந்தும் ஐ.டீ துறையை தேர்வு செய்வதில்லை.

அப்படியானவர்களுக்கு தான் இந்த பதிவு.

1. Chief Software Architect
புதிய யோசனைகளை கொண்டு மென்பொருள்களை அமைத்தல், அந்த மென்பொருளை வடிவமைக்க, உருவாக்க ஒரு குழுவை நிர்வகித்தல் இவரின் பணியாகும்.
இந்த தொழிலானது இந்த ஆண்டின் அதிகப்படியான கேள்விக்குரிய ஐ.டீ தொழிற் துறையொன்றாகும்.
சராசரி  ஆண்டு வருமானம்: $108,028
இலங்கை  ரூபாயில்- மாதத்திற்கு சுமார் 12 இலட்சம்.

2.. Lead Architect
இவர் மென்பொருளொன்றை எழுதுகிறவராக இருப்பார் அதே நேரம், மென்பொருளுக்கு உயர்தரத்திலான வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பவிடய‌ங்கள் சம்பந்தமான மென்பொருள் எழுதுகிற கருவி, ப்ளாட்ஃபார்ம்( அதாவது மெக்,விண்டோஸ்) திரிவு என்பன இவரை ச்சார்ந்தததாகும்.
சராசரி  ஆண்டு வருமானம்: $100,662
இலங்கை‌ ரூபாயில்- மாதத்திற்கு சுமார் 11 இலட்சம்

3.Project Managers
ஒரு ஐ.டீ ப்ராஜெக்ட் தோல்வியுருகிறது எனின் அது அந்த ப்ராஜெக்டை தயாரித்த  குழு மற்றும் அதனை விற்பனை செய்யும் குழு என்பவற்றின் பொடுபோக்கிலேயே தங்கியுள்ளது. இந்த பொடுபோக்குத்தனத்தை கட்டுப்படுத்த அந்த குழுக்களை நிர்வகிப்பவர் தான் இந்த Project Managers.இவர்கள் தான் ஒரு தயாரிப்பின் வெற்றிக்கு வழி வகுப்பர்.
சராசரி  ஆண்டு வருமானம்: $80,202
இலங்கை மாத‌ ரூபாயில்-  மாதத்திற்கு சுமார் 9 இலட்சம்


4. Product Development Manager
இவர்கள் வியாபாரத்துக்கும், வாடிக்கையாளர்களுக்கும்  இடையே நின்று வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்திக்கும் விதமாக‌ ப்ராஜெக்டில் மேம்படுத்தல் செய்யும் அதிகாரம் பெற்ற‌வர்கள்.
சராசரி  ஆண்டு வருமானம்: $75,292
இலங்கை மாத‌ ரூபாயில்-  மாதத்திற்கு சுமார் 8 இலட்சம்


5. Digital Marketing
விற்பனைக்கான மையக்கருக்கள் மாறாது எனினும் விற்பனைக்கான முறைகள் மாறலாம்.அதாவது பழமையான முறைகள் விடுத்து தொழில்நுட்ப உலகில் கணனி மூலமாக வாடிக்கையாளருக்கு தங்களுடைய தயாரிப்பினை அறிமுகம் செய்து  விற்பனை செய்வதே இவர்களின் கடமையாகும்.
சராசரி  ஆண்டு வருமானம்: $72018
இலங்கை மாத‌ ரூபாயில்-  மாதத்திற்கு சுமார் 8 இலட்சம்


6.Sales People and Managers
இவர்கள்  தான் சந்தையில் தங்களுக்கான போட்டித்தன்மையுள்ள நிறுவனங்கள் மற்றும் அதனுடைய தயாரிப்புக்களை ஆய்வு செய்வதே இவர்களின் பணியாகும்.
சராசரி  ஆண்டு வருமானம்: $42,556
இலங்கை மாத‌ ரூபாயில்-  மாதத்திற்கு சுமார் 5 இலட்சம்

7. Social Media Specialist
சோஸியல் மீடியா அதாவது சமூக வலைத்தளங்கள் இவற்றில் மிக்க அனுபவமுள்ள இவர்கள் தான் உங்களுடைய நிறுவனத்தையும், தயாரிப்பையும் மக்களிடையே கொண்டு செல்வதில் முக்கியமானவர்கள். இவர்களுக்கு வாடிக்கையாளர்களுடன் திறமையாக உரையாடும் திறனும், விற்பனைத்துறையில் அனுபவமும் இருத்தல் அவசியமாகும் அத்தோடு இவர்கள் எந்த கணனி ஓ.எஸ் உடனும் வேலை செய்யும் திறன் கொண்டிருத்தல் அவசியமாகும்.
சராசரி  ஆண்டு வருமானம்: $34,372
இலங்கை மாத‌ ரூபாயில்-  மாதத்திற்கு சுமார் 4 இலட்சம்


இங்கே நான் குறிப்பிட்டுள்ள ஐ.டீ துறைகள் முக்கியமாக சொல்லக்கூடிய அளவுக்கு முன்னனியிலுள்ள தொழில்களாகும் இவை தவிர இன்னும் பல தொழில்களும் ஐ.டீ துறையில் உண்டு.

(


இனி பில்கேட்ஸ் ஆவுரதும் பிசுகோத்து ஆவுரதும் அவங்க அவங்க திறமய பொருத்து...)

எம்.மாறா

Some say he’s half man half fish, others say he’s more of a seventy/thirty split. Either way he’s a fishy bastard.