A/L இல் 3S எடுத்தவர்களுக்கும் பல்கலைக்கழக அனுமதி...

22:56 0 Comments

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக BBA,BCom  பட்டப்படிப்புகளை மேற்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ஏற்கனவே எம்முடைய வலைத்தளத்தில் ப‌திவிடப்பட்ட வெளிவாரிபட்டப்படிப்பு பற்றிய‌  பதிவை ஒரு தடவை வாசித்து விடுவது பிரயோசனமாக இருக்கும்.
அதற்கான லிங்க்
http://allktamil.blogspot.com/2014/11/external-degrees-sri-lanka.html

இந்த வெளிவாரிகற்கை நெறிகளின் பிரதான நோக்கம், க.பொ.த உயர் தர பரீட்சையில் சித்திபெற்றிருந்தும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகாத மாணவர்களை பட்டபடிப்பொன்றுக்கு உள்வாங்குதலே ஆகும்.

அதுமட்டுமல்லாது பகுதிநேரமாக‌ கற்றுக்கொண்டும், முழு நேரமாக‌ வேறு ஏதேனும் தொழில்களில் ஈடுபட்டுகொண்டும் அல்லது வேறு கற்கை நெறிகளை மேற்கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது இந்த வெளிவாரி பட்டப்படிப்புக்கள்.

இதற்கான கட்டணங்கள் விபரம்,

விண்ணப்பத்தை செயற்படுத்தும் கட்டணம் 1000/=
முதல் வருடம் 40,000/=
இரண்டாம் வருடம் 36,000/=
மூன்றாம் வருடம் 30,000/=  

ஆக மொத்தமாக 107,000/=.

ஒரு வருடத்துக்கான கட்டணத்தை இரண்டு தவணைகளில் செலுத்த முடியும். அதுமட்டுமல்ல ஒரு வருடத்துடன் அல்லது இரண்டாவது வருடத்துடன்


நீங்கள் இந்த கற்கை நெறியிலிருந்து விலக விரும்பினால் பின்வரும் சான்றிதழ்களை பெற முடியும்.

1.முதல் வருடம் முடித்தவர்கள் - Certificate in Business Administration 
2.இரண்டாவது வருடம் முடித்தவர்கள் - Diploma in Business Administration

இப்பட்டப்படிப்பானது சுய கற்றலினால் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாக இருப்பதுடன் ஆகக்குறைந்தது ஒரு பாடத்துக்கு இரண்டு நேரடி விரிவுரைகள் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்படும், அத்தோடு அடுத்தவருடத்திலிருந்து கற்றல் முறைமைகளை இலகுவாக்க கணனி மூலமான கற்றல் முறைமை அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது வரவேற்கத்தக்கதொரு முடிவாகும்.

இக்கற்கை நெறிக்கு 3s சித்திபெற்றவர்கள் மட்டுமல்லாது  (HNDA) (II), (HNDM) (II), இலங்கை தொழில்நுட்ப கல்லூரிகளில் National Certificate in Business Studies  இனை 2 வருடத்தில் பூர்த்திசெய்தவர்கள்,
. Book - Keepers Higher Certificate in Commerce of the Sri Lanka Technical College, சாதாரண தர பரீட்சை சியில் சித்திபெற்று AAT stage (III)  அல்லது CIMA Stage – II, Chartered (CASL) Stage – II அல்லது AAT  இறுதிபரீட்சையில் சித்திபெற்றவர்களும் இந்த கற்கை நெறியினை மேற்கொள்ள முடியும்.

 இதனைப்பற்றிய மேலதிக தகவல்கள், ஆவணங்கள், விண்ணப்பப்படிவங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்ய

http://www.seu.ac.lk/cedpl/downloads.php

இற்கு செல்க‌


எந்தவொரு வெலிவாரி பட்டப்ப‌டிப்பு நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் போதும் எம்முடைய வலத்தளத்தில் பதிவேற்றப்படும்..

எம்.மாறா

Some say he’s half man half fish, others say he’s more of a seventy/thirty split. Either way he’s a fishy bastard.