இலங்கையிலும் மலிவு விலையில் அனவருக்கும் ஆண்ராய்ட் ஒன்று அறிமுகம்

06:50 0 Comments

ன்று இணையத்தை அலசியதில் அறியக்கிடைத்ததில் பிடித்ததொன்று பற்றிய பதிவு தான் இது.
நாள் ஒன்றுக்கு நவீனம் நூறு என வளர்ந்து கொண்டிருக்கும் இந்த கூகுள் உலகம், இந்த வருடம் 5 பில்லியன் வாடிக்கையாளர்களைக்கவரும் நோக்கோடு கொண்டு வந்திருக்கும் திட்டம் தான்  ANDROID ONE.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற Google I/O 2014 இல் Sundar Pichai (Senior Vice President at Google) அவர்கள்,




வளம் மிக்க ஆற்றல்களால் நிறைந்து போன இந்த தொழில்நுட்ப உலகின் மனிதர்கள் ஏதோ ஒன்றில் தன்னுடைய சாதனைகளை நிலை நாட்ட ஆர்வம் கொண்டுள்ளனர்.
இதற்காக புதியனவற்றை உருவாக்குதல்,கேட்டல்,அறிதல்,தேடல்,ஒத்துழைத்தல்,பேசுதல் போன்று பல விடயங்களிலும் தங்களை ஏதோ ஒருவகையில் ஈடுபடுத்துகின்றனர்.
என்றாலும் இவ்வாறான வாய்ப்புக்கள் உலகில் 4 நபர்களில் ஒருவருக்கே ஸ்மார்ட் ஃபோன் ஒன்றினூடு முழுமையாக சாத்தியமாகிறது.

ஒவ்வொருவரும் தமக்கென ஒரு ஸ்மார்ட் ஃபோன் வைத்திருந்தால் இந்த உலகில் சாதனைசெய்ய‌ ஒரு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிற கூகுளின் லட்சிய கனவு தான்  ANDROID ONE.

சுருக்கமாய் சொல்லப்போனால்:

"ANDROID ONE என்பது மிகவும் மலிவானதும், மிக மிக தரமானாதுமான 100$ (சுமார் 13000) ற்கும் குறைந்த ஆண்ட்ரொய்ட் ஸ்மார்ட்ஃபோன்"

தொழில்நுட்பத்தை அதிகம் புகுத்தி அனைவருக்கும் தொழில்நுட்பம் கிடைக்க வேண்டும் என கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள திட்டம்.





ஒன்று நாம் சிந்தனை செய்கிற வழியை மாற்றும்,
ஒன்றால் இன்னொன்று விதையாகும்,
அந்த விதை இன்னும் ஆக்கும்,
ஆக்கம் அத்தனையும் இன்னும் ஆக்கும்.
அத்தனையும் கடைசியில் ஆற்றலை ஆக்கும்.

ஒன்றால் இந்த பிரபஞ்சம் ஒன்றாகும், 
ஒன்றாய் குடும்பங்கள் ஆக காரணங்களில் இந்த ஒன்றும் ஒன்றாகும்

ஒருவரின் ஒன்றால் பெற்ற ஒளி
பலரை துயில் நீக்கி இருள் நீக்கும்

ஒன்றால் காதல்கள் எல்லாம் காவியங்கள் பாடும்,
ஒன்றால் இந்த உலகம் புன்னகை தேக்கும்,
ஒன்றால் இந்த உலகம்  உறவுகள் சேர்க்கும்,
ஒன்றால் இந்த உலகம் வளம் பெருக்கும்,
இந்த ஒன்றால் உலகமே ஒன்றாய் மாறும்.
மாற்றங்கள் வேண்டிய அந்த ஒன்று ஆண்ராய்ட் ஒன்று


இந்தியாவில் முதலில் கூகுளினால் அறிமுகம் ஆன இந்த திட்டம் இன்றைய(2014.12.22) செய்திகளின் படி  அடுத்த கட்டத்தின் ஆரம்பமாக ANDROID ONE இந்தியாவை அண்மித்த மூன்று நாடுகளில் அறிமுமாகிறது.
1.இலங்கை
2.நேபால்
3.பங்களாதேஷ்

இத்திட்டத்தில் இணைந்த பங்காளி நிறுவனங்களே இப்புதிய ANDROID ONE இனை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றன. அவை இந்தியாவில் வெளியிட்ட ஸ்மார்ஃபோன்கள் Spice Android One Dream, Karbonn Sparkle V, and Micromax Canvas A1.

இந்த நிறுவனங்களின் சந்தைப்படுத்தல்கள் அடுத்த  கட்ட இலக்கை நோக்கி நம் நாட்டுக்கும்...

மேலதிக விபரங்கள் :www.android.com/one என்ற முகவரியில் பார்க்க, அல்லது கூகுளிடுங்கள்.

எம்.மாறா

Some say he’s half man half fish, others say he’s more of a seventy/thirty split. Either way he’s a fishy bastard.