பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டு இருக்கும்....
பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டு இருக்கும் அதன் புதிய இணையத்தள தோற்றம்
பல காலமாய் பழமை வடிவிலமைந்திருந்த http://www.doenets.lk/ ஆன பரீட்சைப்பெறுபேருகள் சரி பார்க்கும் இணையத்தளம் புதிய மெருகூட்டல்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த புதிய இணையத்தளத்தில் புதியு சில வசதிகளும் காணப்படுகின்றன.
அப்படியானதுகளில் ஒன்று தான் ONLINE CERTIFICATES. இந்த வசதியானது நம்முடைய O/L, A/L பெறுபேற்றுச்சான்றிதழ்களினை ஒரு பிரதிக்கு 250 ரூபாய் என்னும் கட்டணத்தில் பெற முடியும். இதனை நேரடியாக நாமோ அல்லது வெளிநாட்டு அமைச்சுக்கோ செல்லும் படி தெரிவு செய்யலாம்.
நம்முடைய பெறுபேற்றுச்சான்றிதழ்கள் காணாமல் போயிருந்தாலோ,பழுதடைந்திருந்தாலோ இந்த முறை மூலம் பெறுவது இலகுவானதொரு விடயமாகும்.
இதற்கான கட்டணத்தை நாம் சம்பத் கணக்கினூடாக செலுத்தமுடியும்.
புதிய வரவாக வரவிருக்கும் A/L பரீட்சை பெறுபேருகளை ஓரிரு நாட்களில் வெளியிட இருக்கும் தருணத்தில் இந்த புதிய வடிவமைப்பானது எல்லோரையும் கவரும்.
இத்தளத்திற்கு சென்று நீங்களும் இப்புதிய தோற்றத்தை காணலாம்